ஐஐடி இயக்குனர், தமிழ்நாடு அரசு செயலர் வாழ்த்துரை வழங்கிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் 2025திருச்சியில் சிறுகதைத் தொகுப்புப் புத்தக வெளியீடு

போதையில்லா தமிழ்நாடு உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பும், ராணியம்மாள் கல்வி அறக்கட்டளையும் இணைந்து, “இளம் தலைமுறை எழுத்தாளர்கள் 2025” சிறுகதை போட்டியை மாநிலம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்காக நடத்தியது. இதன் மூலம் அரசுப் பள்ளி, கல்லூரி மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்களது சிந்தனையை எழுத்து வழியாக வெளிப்படுத்தும் வாய்ப்பு பெற்றனர்.

இம்மாநில அளவிலான போட்டிக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 மாணவர்கள் சிறுகதைகள் எழுதி அனுப்பினர். அதில் தேர்வாகிய 69 சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, சிறந்த புத்தகமாக பதிக்கப்பட்டு, 2025 ஜூன் 7ஆம் தேதி திருச்சி கலையரங்கில் வெளியிடப்பட்டது.

தலைமை விருந்தினர்:

திரு. ஹரி கிருஷ்ணன், ஐஐடி மெட்ராஸ் அனைவருக்கு ஐஐடி மெட்ராஸ் திட்டத் தலைவர்

தனிப்பட்ட கதைகள் – தனித்துவம்: பார்வையற்ற மாணவி சா.சஸ் ரீனா பிர்தவுஸ் புதுக்கோட்டை அரசு கல்லூரியிலிருந்து, மாற்றுத் திறனாளி சிறுமி வா.சு ேஸபிதா விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, மூன்றாம் வகுப்பு மாணவன் பிரின்ஸ் ஜெபாஸ்டியன் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து இவர்களின் கதைகள் சமூக விழிப்புணர்வையும் மன உறுதியையும் எடுத்துக்காட்டின.

திறமைகளை முன்னிறுத்திய விருந்தினர்கள்: மருத்துவர் சதீஷ், ஹாப்பி வில்லேஜ் குக்கிங் நிறுவனர் குமரேசன், எழுத்தாளர் டோம்னிக் சேகர், வழக்குரைஞர் ராமகிருஷ்ணன், இயற்கை விவசாயி செந்தமிழன், ராணியம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சர்வம் சரவணன், “மனிதம் காப்போம்” ஒருங்கிணைப்பாளர் சந்துருகுமார், தமிழ்நாடு தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், வழக்குரைஞர் அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தலைமை விருந்தினர் திரு. ஹரி கிருஷ்ணன் உரையில்:

“எழுத்து என்பது காலத்தைக் கடக்கும் சமூக குரல். இளம் வயதில் எழுதத் தொடங்கும் மாணவர்கள் நாளைய சமூக மாற்றத்துக்கான தூண்கள். இந்தப் போட்டி மாணவர்களின் சிந்தனை திறனை ஊக்குவிக்கிறது. மாணவர்கள் சமூகப் பொறுப்புடன் வளரவேண்டும் என்ற நோக்கத்துடன் அமைந்துள்ள இந்நிகழ்வு ஒரு தேவைப்படும் முயற்சி.”

இந்த விழாவிற்கு 38 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் நேரில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். “இளம் அக்னி சிறகுகள் விருது” சிறப்பு விருந்தினர்கள் கரங்களில் வழங்கப்பட்டு மாணவர்களின் எழுத்து பயணத்திற்கு உறுதுணையாயிற்று.

புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கியவர்கள்:

பேராசிரியர் காமகோடி, இயக்குனர், IIT Madras

சோ. மதுமதி இ.ஆ.ப, தமிழ்நாடு அரசு செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை

இந்நிகழ்வு மாணவர்களின் சமூக விழிப்புணர்வு, எழுத்துப் புலமை மற்றும் சமூக பொறுப்பை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் முன்னோடி முயற்சியாக அமைந்துள்ளது.

அன்புடன்,
ராமகிருஷ்ணன்
9176319004
ஒருங்கிணைப்பாளர், இளம் தலைமுறை எழுத்தாளர்கள்
செல்வ குமார்
8870245628
ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு தன்னார்வலர்கள்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *