Tamil Nadu Volunteers – தமிழ்நாடு தன்னார்வலர்கள்

Translate This Website

Translate This Website

ஐஐடி மெட்ராஸில் சர்வதேச தன்னார்வ தினத்தில் கௌரவிக்கப்பட்ட 38 மாவட்ட தன்னார்வலர்கள்

சேவை செம்மல் விருது என்பது தன்னலமற்ற சேவை செய்து வரும் தன்னார்வலர்கள் மற்றும் சமூக சேவகர்களை மாவட்ட வாரியாக அங்கீகரிக்கும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய கௌரவ நிகழ்வாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரே ஒரு சேவையாளருக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுவது இதன் சிறப்பாகும்.

கடந்த ஒரு ஆண்டுக் காலமாக, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் சேவை செய்து வந்த தன்னார்வலர்களை தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு தனித்தனியாக அடையாளம் கண்டு, அவர்களின் சமூகப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வந்தது. இந்த விருதிற்கான தேர்வு பின்வரும் முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது:

முதலில், தன்னலம் கருதாமல் சமூக சேவையில் ஈடுபடுவதுடன், பிறரையும் சமூகப் பணியில் ஈடுபடத் தூண்டும் திறன் பெற்றிருப்பது அவசியம். அடுத்ததாக, பணம், பொருள், போட்டி, பொறாமை ஆகிய எதனையும் எதிர்பாராமல், தனிப்பட்ட புகழோ அடையாளமோ தேடாமல், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைவருடனும் இணைந்து பணியாற்றும் பண்பு மதிப்பிடப்பட்டது.
மேலும், தன்னுடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் மனப்பான்மையின் மூலம் சமூகத்தில் முன்னுதாரணமாக செயல்படுவதும் முக்கியமான அளவுகோலாகும். இதற்கு இணையாக, தனிப்பட்ட சேவை மட்டுமின்றி, தன்னைப் போன்று பல புதிய சேவை செயல்பாட்டாளர்களை உருவாக்கி, மாவட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைக்கும் அளவிற்கு சேவைப் பரப்பை விரிவுபடுத்துதல் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

இறுதியாக, எளிமை, நேர்மை, மற்றும் இலக்கை நோக்கிய உறுதியுடன் தொடர்ச்சியாக சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருதல், இந்த விருதிற்கான தேர்வில் மிகப் பெரும் பங்கு வகித்தது.

விருது என்றாலே பணம் கொடுத்தால் அல்லது சிபாரிசு, செல்வாக்கு இருந்தால் பெற முடியும் என்ற கலாச்சாரம் தமிழகத்தில் வேரூன்றி வரும் இந்த காலத்தில், எந்த வகையான வணிக நோக்கமும் இன்றி, உண்மையான சேவை செய்தவர்களை மட்டுமே அங்கீகரிக்க வேண்டும் என்ற தெளிவான நோக்கத்துடன் தான் இந்த சேவை செம்மல் விருது திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு சர்வதேச தன்னார்வலர்கள் தினத்தையொட்டி, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதிலுமிருந்து சமூக சேவையில் தன்னலமின்றி பணியாற்றிய 32 தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

“மிகவும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட கல்வி நிறுவனம்” – ஐஐடி மெட்ராஸ் கௌரவிப்பு

சர்வதேச தன்னார்வலர் தினம் முன்னிட்டு தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில், தமிழகம் முழுவதும் தன்னலமின்றி சமூகப் பொறுப்புணர்வு கொண்ட மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை கௌரவிக்கும் ‘சேவை செம்மல் விருது 2025’ விழா ஐஐடி மெட்ராஸ் -ல் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவின் சிறப்பு விருதாக, கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, தமிழ் பண்பாட்டுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் நாட்டுக்காக ஆற்றிய மிகப்பெரிய சமூகப் பங்களிப்புக்காக “மிகவும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட கல்வி நிறுவனம்” என்ற விருது ஐஐடி மெட்ராஸுக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதை, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலரும் TANGEDCO நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான Dr. J.  ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள், ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி அவர்களுக்கு வழங்கினார்.

ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி அவர்களின் மேற்கோள்

“கல்வி என்பது மனித வாழ்வையும் சமூகத்தையும் மாற்றக்கூடிய மிக வலிமையான ஆயுதம். இன்று, எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல், அற்புதமான அர்ப்பணிப்புடன் சமூக சேவை செய்து வரும் உண்மையான சேவையாளர்களை ஐஐடி மெட்ராஸ் போன்ற மதிப்புமிக்க மேடையில் கௌரவிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அவர்கள் மக்கள் வாழ்வை மேம்படுத்த பணியாற்றுவது போல், நாங்களும் கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு அர்த்தமுள்ள கல்வி வாய்ப்புகளை வழங்க உறுதியாக செயல்படுகிறோம்.

ஒரு மாணவர் JEE வாய்ப்பை தவறவிட்டாலும், அவரை IIT அடையத் தடுக்காது. எங்கள் BS Degree Programme மற்றும் Sports Excellence Admission மூலமாக JEE இன்றி கூட திறமைமிக்க மாணவர்கள் IIT யில் சேர முடியிறது; அதோடு கட்டண சலுகைகளும் வழங்கப்படுகின்றன. எங்களின் ஒரே இலக்கு ‘அனைவருக்கும் IITM (IITM For All)’—கல்வி கனவு காணும் ஒவ்வொருவரையும் அடைய வேண்டும்.”

மிகவும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி” Dr. J.  ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டின் மிகவும் மதிக்கப்படும் நிர்வாகிகளுள் ஒருவரான Dr. J. ராதாகிருஷ்ணன் IAS அவர்கள், தனது நிர்வாகத் திறன், மனிதநேய பண்பு மற்றும் பேரிடர் மேலாண்மை திறமைகளால் இந்தியாவில் ஒரு முன்னோடியாக திகழ்கிறார். மக்களின் உயிர் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு செயல்படும் அவருடைய பணிப்போக்கு, அவரை நாட்டின் மிகவும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட நிர்வாகிகளில் ஒருவராக உயர்த்தியுள்ளது. இந்த உயரிய மனிதநேயப் பணிக்கான அங்கீகாரமாக, அவர் “Most Socially Responsible IAS Officer” விருதைப் பெற்றார். இந்த விருது, ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் நடைபெற்ற சேவை செம்மல் விழாவில், ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பேராசிரியர் V. காமகோடி அவர்களால் கௌரவிக்கப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவின் போது நாகை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த அவர், இந்தியாவின் வரலாற்றில் மிகச் சவாலான மீட்பு மற்றும் நிவாரணப் பணியை நேரடியாக வழிநடத்தினார். ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளின் மரியாதையான கையாளல், நோய் பரவலைத் தடுக்க உடனடி மருத்துவ நடவடிக்கைகள், அழிந்த கடற்கரை கிராமங்களை விரைந்து புனரமைத்தல் போன்ற அனைத்தையும் நேரில் சென்று கண்காணித்து சாதனை படைத்தார். அவரது வீரத்தையும் மனிதநேயத்தையும் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் கூட பாராட்டினார்.

கோவிட்-19 பேரிடர் காலத்தில் அவர் தமிழ்நாட்டின் நம்பிக்கை முகமாக திகழ்ந்தார். மருத்துவமனைகள், கட்டுப்பாட்டு மண்டலங்கள், வெள்ளப் பகுதிகள்—எந்த இடத்திலும் அவர் நேரடியாக செயல்பட்டு மக்களை உற்சாகப்படுத்தி, உயிர் காக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார். பொதுமக்களுக்கு தைரியம் அளிக்கும் நிர்வாகியாக அவர் அந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் முன்னணி பாதுகாப்பு வீரராக பணியாற்றினார்.

அதிகாரப் பொறுப்புகளைத் தாண்டியும், அவரது மனிதநேய பணிகளே அவரின் உண்மையான பெருமை. சுனாமியில் பெற்றோரைக் இழந்த குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பராமரிப்பு உதவி செய்து, ஒரு குழந்தையை நேரடியாகத் தத்தெடுத்து வளர்த்து துயரத்தில் இருந்த ஏழை பெண்களின் திருமணச் செலவையும் அமைதியாக ஏற்று நடத்தி வைத்தார். எந்தச் செயலுக்கும் பிரசாரம் தேடாத எளிமையும் பணிவும் அவரது நற்பண்புகளை வெளிப்படுத்துகின்றன.

அரசு அதிகாரி, தன்னார்வலர், பொதுமகன் என்று எவராக இருந்தாலும் அனைவரிடமும் மரியாதையுடனும் அன்புடனும் அணுகும் பண்புக்காக அவர் மக்கள் மனதில் ஒரு நம்பிக்கையான நிர்வாகியாக நிலைத்து நிற்கிறார். சமூக நலனுக்காக இடைவிடாது செயல்படும் அவரது வாழ்நாள் அர்ப்பணிப்பே, இந்த விருதிற்கு அவர் உண்மையாகத் தகுதி பெற்றவராக இருக்கச் செய்கிறது.

Dr. J. ராதாகிருஷ்ணன் IAS அவர்களின் மேற்கோள்

“அரசுப் பணியாளர்களாக நமது முதன்மைப் பொறுப்பு மக்கள் பாதுகாப்பும், மக்கள் சேவையும். அங்கீகாரம் பெறுவதை விட, மக்கள் வாழ்வை உயர்த்த தன்னலமின்றி பணியாற்றும் உண்மையான நாயகர்கள் கௌரவிக்கப்படுவதைக் காண்பதில் பெருமையாக உள்ளது. சர்வதேச தன்னார்வலர் தினத்தில், அவர்களின் சேவைச் சிந்தனையை நாம் கௌரவிக்கிறோம்—ஏனெனில் ஒவ்வொரு பங்களிப்பும் முக்கியமானது.

இந்த சேவை செம்மல் விருதின் மிகச் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வருடம் முழுவதும் தன்னார்வலர்களின் பணிகள் கண்காணிக்கப்பட்டு, பலரில் இருந்து ஒரே மிகத் தகுதியான நபர் தேர்வு செய்யப்படுகிறார். இந்தக் கடுமையானவும் வெளிப்பட்ட தன்மையும் கொண்ட செயல்முறை பாராட்டுக்குரியது.

தமிழ்நாடு தன்னார்வலர்கள் ஆண்டு விழாவிற்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.”

ஐஐடி மெட்ராஸ் விருதின் முக்கிய அம்சங்கள்

அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் (Anaivarukkum IITM / IITM For All)
ஐஐடி தரமான உயர்கல்வியை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றும் இந்த பெரும் பார்வைத் திட்டத்தின் மூலம், பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் விழிப்புணர்வு பெற்று, சான்றிதழ் படிப்புகள் முதல் பட்டப்படிப்புகள் வரை பயின்று வருகின்றனர்.

வித்யா சக்தி
2021 ஆம் ஆண்டு ஐந்து கிராமங்களில் ஒரு சிறிய முயற்சியாகத் தொடங்கிய வித்யா சக்தி திட்டம், இன்று எட்டு மாநிலங்கள் மற்றும் லடாக் ஆகியவற்றைச் சேர்ந்த மொத்தம் 7,200 அரசு பள்ளிகளுக்கு விரிவடைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இலவச ஆன்லைன் நேரலை வகுப்புகளைப் பெறும் 6.7 லட்சம் மாணவர்கள் தொடர்ந்து கல்வியைப் பெறுகின்றனர். பள்ளிவிட்டு விலகுதல் குறைவதற்கும், மாணவர்களுக்கு இடையறாத கற்றலை வழங்குவதற்கும் இந்த திட்டம் ஒரு முக்கிய புரட்சியாக திகழ்கிறது.

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை மேம்படுத்தல் – காசி தமிழ் சங்கமம்
தமிழ் பண்பாடு, மரபு மற்றும் மொழியை உலகுக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஐஐடி மெட்ராஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம், இந்த ஆண்டு நான்காவது முறையாக வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. “தமிழ் கற்கலாம்” என்ற கருப்பொருளின் கீழ், தமிழ் இலக்கியம், வரலாறு மற்றும் கலாச்சாரம் சிறப்பாக விளக்கப்படுகிறது. வாராணசி நகரிலுள்ள பள்ளிகளில், ஆன்லைனிலும் நேரடி வகுப்புகளிலும் தற்போது 30,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழகம் மற்றும் காசி எனும் இரண்டு நாகரிகங்களுக்கு இடையே இந்த முயற்சி ஒரு ஆழமான பண்பாட்டு பாலமாக அமைந்துள்ளது.

சுகாதாரம் மற்றும் மருத்துவத் தொழில்நுட்பம்
Healthcare Technology Innovation Centre (HTIC) மற்றும் Shankar Centre of Excellence போன்ற மையங்கள் மூலம் சுகாதாரத் துறைக்கான நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. மெக்கானிக்கல் செப்டிக் டேங்க் சுத்திகரிப்பு கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் நோய்களை துல்லியமாக கண்டறியும் கருவிகள் உருவாக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குறைந்த செலவில் தரமான சிகிச்சை கிடைக்க வழிவகுக்கிறது.

கல்வி மற்றும் திறன் மேம்பாடு
NPTEL எனும் இந்தியாவின் மிகப் பெரிய இலவச டிஜிட்டல் கல்வித் தளம், நாடு முழுவதும் கோடிக்கணக்கான மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்கிவருகிறது. Data Science மற்றும் Electronic Systems துறைகளில் வழங்கப்படும் ஆன்லைன் BS பட்டப்படிப்பு, பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கும் அணுகக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Sports Excellence Admission Program மூலம், சிறந்த விளையாட்டு திறமை கொண்ட மாணவர்கள் நேரடியாக உயர்கல்விக்குள் வருவதற்கான சிறப்பு வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கல்வி அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை ஐஐடி மெட்ராஸ் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை
International Centre for Clean Water மூலம் தூய்மையான குடிநீர் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. காற்றாலை ஆற்றல் ஆராய்ச்சி மையங்கள், நிலைத்த சப்ளை செயின் முறைகள் போன்ற முயற்சிகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஐஐடி மெட்ராஸ் இந்தியாவின் முன்னோடியாக திகழ்கிறது. வளாகமே ஒரு பசுமை வளாகமாக நாட்டின் பல கல்வி நிறுவனங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது.

ஊரக மற்றும் கிராமப்புற மேம்பாடு
Pravartak Asha Rural Technology Centres மற்றும் Rural Technology & Business Incubator ஆகியவை ஊரகப் பகுதிகளில் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சியை ஊக்குவித்து வருகின்றன. மீளுருவாக்க வேளாண்மை, தொலை–டிஜிட்டல் சுகாதாரம், கிராமப்புற வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பல திட்டங்கள் மூலம், மக்களின் நாளாந்த வாழ்க்கையில் நேரடி முன்னேற்றம் ஏற்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் ஆதரவு
TTK–R2D2 மையம், மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை உறுப்புகள் மற்றும் உதவித் தொழில்நுட்பங்களை வடிவமைத்து ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை மற்றும் சுயநிறைவை ஏற்படுத்துகிறது. தன்னால் இயன்றவரை தானே நிற்க உதவும் கருவிகளை உருவாக்குவது இந்த மையத்தின் மையக் குறிக்கோள்.கோவிட்–19 காலத்திய தேசிய பணி
கோவிட் காலத்தில் ஐஐடி மெட்ராஸ் 15 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உதவி மற்றும் உபகரணங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டது. நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்ட Aarogya Sethu, CoWIN தடுப்பூசி தளம் மற்றும் தேசிய தடுப்பூசி டாஷ்போர்டு ஆகியவற்றின் செயல்திறன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

சிறப்பு விருது 

தனது அரசுப் பணியில் நேர்மை, கடமை உணர்வு, சமூகப் பொறுப்பு ஆகியவற்றுடன் பணியாற்றி வரும், முன்னாள் திருப்பத்தூர் மாவட்ட துணை ஆட்சியராகவும் தற்போது திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரியாக சேவை செய்து வரும் திரு. செல்வம் அவர்கள், “மிகவும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட அரசு அதிகாரி” விருதினைப் பெற்றுள்ளார்.

சமூக வலைத்தளங்களைத் தன் தனிப்பட்ட விளம்பரத்திற்காக அல்லாமல், உதவி தேவைப்படுபவர்களை அடையாளம் கண்டு, மனிதநேய உணர்வுடன் தொடர்ந்து சேவை புரிந்து வரும், சென்னையைச் சேர்ந்த ஹேமந்த் குமார் நடத்தும் Whacky Patrol சமூக வலைத்தள சேனல், “மிகவும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட சமூக வலைத்தளம்” என்ற விருதைப் பெற்றுள்ளது. தனது முகத்தை தலைக்கவசத்தின் ஊடாக மறைத்து, முழுக்க முழுக்க சேவையை மட்டுமே முன்னிறுத்தும் இவரது பணிக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பனை விதை நட்டு சாதனைப் படைத்தவர்கள் கௌரவிப்பு

தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் பனைவிதை நட்டுத் திட்டத்தின் மூலம் 2 கோடியே 24 லட்சம் பனைவிதைகள் விதைக்க காரணமாக இருந்து ஒருங்கிணைத்த 10 தன்னார்வலர்களும், அவற்றை அக்ச–டிகிரி (அட்ச, தீர்க்க ரேகை) குறியீடுகள் மூலம் கண்காணித்து பராமரிக்க உதவும் “உதவி” செயலியை உருவாக்கிய திரி அறக்கட்டளையும், இந்த விழாவில் விருதுபெற்று கௌரவிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு குறித்து

தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் 3,000-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களை இணைத்துள்ள ஒரு பெரிய சமூக வலையமைப்பாகும். இந்த அமைப்பின் வழியாக சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பேரிடர் மீட்பு பணி, கல்வி, சுகாதாரம், கோவிட் மருத்துவமனை சேவை, ஆதரவற்றோருக்கு உணவு, ரத்த தான முகாம்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளனர். இதன் பயனாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரடியாக பலனடைந்துள்ளனர்.

சேவை செம்மல் விருதுகள் முதன்முதலாக 2021 ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில், IGP பாலகிருஷ்ணன் IPS அவர்களின் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பின்னர், இரண்டாவது ஆண்டு விழா TAHDCO நிர்வாக இயக்குனர் கந்தசாமி IAS மற்றும் பூ. கொ. சரவணன் IRS அவர்களின் தலைமை வழிகாட்டுதலில் சிறப்பாக நடத்தப்பட்டது. இவ்வாறு,  ஒவ்வொரு ஆண்டும் உண்மையான சமூக சேவையாளர்களை மாவட்ட வாரியாக கண்டறிந்து கௌரவித்து வருகிறது.  “தமிழகம் முழுவதும் உண்மையான சமூகப் பணியாளர்களை அடையாளம் கண்டு, ஆண்டுதோறும் மாவட்டம் வாரியாக கௌரவிப்போம்”  எல்லா மனிதரும் சமூகப் பொறுப்புடன் செயல்படும் எதிர்காலத்தை உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம். தமிழகத்தின் ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்தது 10 சமூகப் பொறுப்புள்ள தலைவர்களை உருவாக்குவது எங்கள் முக்கிய பணி. இது, அடுத்த தலைமுறைக்கு ஒரு வலுவான, மனிதநேய சமுதாயத்தை உருவாக்கும் வழிகாட்டியாக இருக்கும். என தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் திரு. ஹரி கிருஷ்ணன் மற்றும் திரு. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு: 9940483223 / 9087293339 / 9003170726
புகைப்படங்கள்:  = https://drive.google.com/drive/folders/1lpATBX-VadI4Lofiz8DVU7upIO4dnIeW?usp=sharing

Video Linkhttps://www.youtube.com/live/zKbEqi9-VTs?si=B2BArXmXQy16-qdt&t=2925

Awardees List:

Title Name Contact
Most Socially Responsible IAS Officer Dr. J. Radhakrishnan IAS
Most Socially Responsible Educational InstitutionIIT Madras
Most Socially Responsible Government OfficerP. Selvam
Most Socially Responsible Digital ChangemakerHemandh Kumar (Whacky Patrol)
AriyalurD. Elavarasan9786878579
ChengalpattuJayaprakash K9790400606
ChennaiRijoy Thomas9605435521
CoimbatoreKrishnamurthy9171692970
CuddaloreP.Anandh9345443180
DharmapuriSATHISH KUMAR RAJA8667229134
DindigulRMKRK Kulandaivel9842541555
ErodeK K Vimal Karuppannan9786669999
KallakurichiA. Selvakumar8870245628
KancheepuramAswanth Murugan9894881203
KarurK.SENGUTTUVAN9994344010
MaduraiSUNDAR RAJAN S9600807001
MayiladuthuraiK. Raveendran9965056141
NamakkalSrinivasan. P8667874420
NilgirisS. FAROOK AHAMED9944001032
PondicherryV. Veera9894531775
PudukkottaiRAHUL DHANABALAN7975173373
SalemV Sathyaprakash8072319266
SivagangaR. Muthulakshmi Baskaran9566362048
TenkasiA.Therikumar9841591016
ThanjavurNimal Raghavan9962200666
TirunelveliB. Felix Francy9442461434
TirupathurGIRIDHARAN MAHENDIRAN9500358837
TiruppurS.Janakiram9578178282
TiruvallurMohammed Thouship8807775266
TiruvannamalaiKarthik G8098893809
ViluppuramKannan L9123582008
VirudhunagarShanmuga Priyadharshini N9361698610

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *