Tamil Nadu Volunteers – தமிழ்நாடு தன்னார்வலர்கள்

Translate This Website

Translate This Website

உலக உறுப்பு தான தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தன்னார்வலர்கள் சார்பில் புதிய உறுப்பு தான சேவை முயற்சி

உலக உறுப்பு தான தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தன்னார்வலர்கள் சார்பில் புதிய உறுப்பு தான சேவை முயற்சி

உலக உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் சார்பில் பொதுமக்களிடையே உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உறுப்பு தானம் செய்ய விரும்புபவர்களுக்கு தேவையான தகவல் மற்றும் வழிகாட்டுதலை வழங்கவும் புதிய “உறுப்பு தான ஆதரவு மற்றும் விழிப்புணர்வு சேவை” தொடங்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் மூலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளுடன் இணைந்து, குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் தேவையுள்ள மக்களுக்கு உறுப்பு தானம் தொடர்பான தகவல்கள், பதிவு நடைமுறைகள் மற்றும் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.

உறுப்பு தானம் குறித்த சரியான புரிதலை பொதுமக்களிடம் ஏற்படுத்துவது, உறுப்பு தானம் செய்ய விரும்புபவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்குவது மற்றும் குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினரிடையே உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் செல்வது இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

மாநில ஒருங்கிணைப்பாளர்

இந்த சேவை முயற்சிக்காக கண்ணொளி தருவோம் அறக்கட்டளை, தமிழ்நாடு தன்னார்வலர்கள் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது. உறுப்பு தான விழிப்புணர்வு மற்றும் தன்னார்வலர் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மாநிலம் முழுவதும் மேற்கொள்ளும் பணியில் அறக்கட்டளை இணைந்து செயல்படும்.

உறுப்பு தானம் செய்ய விரும்புபவர்கள், பதிவு செய்வது குறித்து சந்தேகம் உள்ளவர்கள், குடும்பத்தினருக்கு வழிகாட்டுதல் தேவைப்படுபவர்கள், சமூகப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த விரும்பும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்த முயற்சியில் இணையலாம்.

பொதுமக்கள் தங்களது விவரங்களை இணையதளம் மூலம் பதிவு செய்தால், உறுப்பு தானம் தொடர்பான அடுத்தகட்ட நடைமுறைகள் மற்றும் அதிகாரப்பூர்வ வழிமுறைகள் குறித்து எங்கள் குழு தேவையான வழிகாட்டுதலை வழங்கும்.

பதிவு செய்ய / வழிகாட்டுதல் பெற:

🌐 tamilnaduvolunteers.org/organdonation

📞 மேலும் விவரங்களுக்கு:
96599 72121 | 93619 72121

உறுப்பு தானம் என்பது ஒருவரின் வாழ்க்கைக்கு நம்பிக்கையை அளிப்பதுடன், பல உயிர்களுக்கு புதிய வாய்ப்பை உருவாக்கக்கூடிய ஒரு உன்னதமான சமூகப் பங்களிப்பாகும். எனவே, பொதுமக்கள் சரியான தகவல்களை அறிந்து, குடும்பத்தினருடன் கலந்துரையாடி, உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்த முன்வர வேண்டும் என தமிழ்நாடு தன்னார்வலர்கள் கேட்டுக்கொள்கிறது.

“ஒருவரின் முடிவு… பல உயிர்களுக்கு புதிய நம்பிக்கை!”

உறுப்பு தானம் செய்வோம்!
உயிர்களை காப்போம்!
விழிப்புணர்வை உருவாக்குவோம்!

— தமிழ்நாடு தன்னார்வலர்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *