இந்தியாவின் மதிப்புமிக்க ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் கல்வி பயிலும் வாய்பை நிறைவேற்ற, JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ் வழங்கும் BS பட்டப்படிப்பு பயில தாட்கோ மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு மூலம் SC / ST / SCA மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். லட்சக்கணக்கான சம்பளத்துடன் 11.5 லட்சம் வேலைவாய்ப்பு நிறைந்த தரவு அறிவியல்(Data Science) பட்டப்படிப்பையும், மின்னனு துறையில் தரம் வாய்ந்த மாணாக்கர்களை உருவாக்கும் மிண்ணணு அமைப்புகள் (Electronic Systems) பட்டப்படிப்பையும், வணிகங்கள் மற்றும் நிறுவனங்களின் அறிவியல் சார்ந்த நிர்வாகத்தை உருவாக்கும் மேலாண்மை மற்றும் தரவு அறிவியலில் (Management and Data Science) பட்டப் படிப்பையும், வலுவான தொழில்நுட்ப மற்றும் பகுப்பாய்வுத் திறன்களுடன் விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில் பணிபுரியத் தயார்படுத்தும் வானூர்தியியல் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பத்தில் (Aeronautics and Space Technology) பட்டப் படிப்பையும், அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்திலும், அறிவாற்றலிலும் சிறந்த மாணாக்கர்களை உருவாக்க சுய கற்றல் முறையில் இணையதளம் மூலமாக படித்து, நேரடியாக தேர்வுகளை எதிர்கொண்டு 4 வருட ஐஐடி மெட்ராஸ் பட்டப்படிப்பினை பெறலாம்.
தகுதித் தேர்வின் அடிப்படையில் BS பட்டப்படிப்பில் சேர்க்கை பெறும் மாணாக்கர்கள் படிக்கும் காலத்திலேயே வேறு ஒரு கல்லூரியில் தங்களது விருப்பமான பட்டப்படிப்பினை படித்துக் கொண்டே BS பட்டப்படிப்பினை பயிலலாம் . இப்படிப்பிற்கான கல்விக் கட்டணமானது சென்னை ஐஐடி மற்றும் தாட்கோவால் இணைந்து வழங்கப்படும். தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு மூலம் பயில்வதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படும். 11 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் விடுமுறையில் பயிற்சி பெற்று, 12ஆம் வகுப்பு செல்லும் முன்பே சேர்க்கை பெறலாம். 12ஆம் வகுப்பு முடிவுக்காக காத்திருப்பவர்களும் உடனே பதிவு செய்து உயர் கல்வியை தொடங்கலாம். வயது வரம்பு இல்லாததால், கல்வியை மேம்படுத்த விரும்பும் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.
பதிவு செய்ய – https://tamilnaduvolunteers.org/scholarship/
மேலும் பட்டப் படிப்பு குறித்த தகவல்களுக்கு study.iitm.ac.in/
குறிப்பு – பதிவு செய்ய கடைசி நாள் மே 15, 2026
Sincerely,
Team – Tamil Nadu Volunteers
tamilnaduvolunteers@gmail.com / 9087293339